Saturday, September 30, 2017

நன்றி !

நன்றி !



            இப்போதைக்கு  விடைபெறுகிறேன் ( எங்கு போக ........எங்கு  வர ....) நண்பர்களே !  நன்றி !

      

                       Image result for sri ramana maharshi holy feet  image


Thursday, September 28, 2017

அனைத்தும் நீயே ! அருணாச்சலா !

அனைத்தும்  நீயே !  அருணாச்சலா !

           


  ஒன்றை  நினைந்து  ஒன்றை  மறந்து                            ஓடும்  மனம்  எல்லாம்  நீ
 என்று  அறிந்தால்  எங்கே  இயங்கும்                                                         பராபரமே !

                   - தாயுமான  ஸ்வாமிகள்.




அனைத்து  இறை  ஸ்வரூபங்களுக்கும்  நன்றி !



Related image

மிக்க  நன்றி !

Wednesday, September 6, 2017

ஹோமத்தில்  கலந்துகொள்பவர்  கவனிக்க வேண்டியவை :


                             வாராஹி  ஹோமம் 


ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.
அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.
இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.
பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.
ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.
அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.


நன்றி : சந்திரசேகர் !  மஹா பெரியவா !








Saturday, August 26, 2017

குருஸ்வரூபம்...!

குருஸ்வரூபம் : -

இன்று பிற்பகல் ஒரு வாலிபன் சோபாவிற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, 'ஸ்வாமி! நேற்று காலையில் அந்த குஜராத்தி அம்மாளிடம் தியாகம் என்றால் அகத்தியாகம் என்று சொன்னீர்களே அது எவ்வாறு உண்டாகும்? முதலில் அகத்தியாகம் என்றால் என்ன?' என்று கேட்டான்.
"அகத்தியாகம் என்றால் எல்லா வாசனைகளும் அடங்கி விட வேண்டும். அது எவ்வாறு உண்டாகுமென்றால் சாதனை மூலம்தான்" என்றார் பகவான். 'சாதனைக்கு குரு வேண்டும் அல்லவா?' என்று அவன் கேட்டதற்கு "ஆமாம் வேண்டும்" என்றார் பகவான். 'சத்குருவை எந்த விதமாக நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது? அந்த குருஸ்வரூபம் எப்படிப்பட்டது?' என்று கேட்டான். "யார் மீது உன் மனம் லயிக்கிறதோ அவர்தான் குரு. சத்குரு இவர்தான் என்று எவ்வாறு தீர்மானிப்பது? அவர் ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்றால், சாந்தமும், அடக்கமும், கட்டுப்பாடும் உடையவராய் காந்தக்கல்போல் தன் பார்வையாலேயே ஆகர்ஷிக்கும் சக்தி படைத்தவராய் எல்லோரிடமும் நிலையான, சமமான நோக்கம் கொண்டவராய் இருப்பதுதான். குருஸ்வரூபம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் தன் ஸ்வரூபம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தன் ஸ்வரூபம் யாதென்று தெரியாத போது குரு ஸ்வரூபம் எப்படித் தெரியும்? குரு ஸ்வரூபத்தைக் காண வேண்டுமென்றால் உலகனைத்தையும் குரு ஸ்வரூபமாகக் காண வேண்டும். ஒவ்வொரு ஜீவனிடமும் குரு பாவத்ையே காண வேண்டும். ஒவ்வொரு ஜீவனிடத்தும் குரு உருவையே காண வேண்டும். ஈச்வரனென்றாலும் அதே போன்றுதான். எல்லாவற்றையும் ஈசனுருவாகக் காண வேண்டும். தான் யாரென்றும் அறியாதவன், ஈஸ்வர ரூபத்தையோ, குரு ரூபத்ையோ எவ்வாறு காண்பான்? எவ்வாறு தீர்மானிப்பான்? அதனால் முதலில் உன்னுடைய உண்மையான ஸ்வரூபம் என்னவென்று தெரிந்து கொள்" என்றார் பகவான்.
'அதைத் தெரிந்து கொள்வதற்கு குரு வேண்டாமா?' என்றான் அந்த வாலிபன். "உண்மைதான். உலகத்தில் எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள். உன் மனம் எவரிடம் லயிக்கிறதோ அவரையே குருவாகக் கொள். குறிதானே குரு?" என்றார் பகவான்.
இளைஞன் அத்துடன் திருப்தியடையாமல் பெரியவர்களில் சிலரது பெயர்களைச் சொல்லி, அவரிடம் இந்தக் குறை இவரிடம் இந்தக் குறை என்று கூறி, 'இவர்கள் எப்படி குரு ஆவார்கள்?' என்று மறுப்பு தெரிவித்தான்.
பகவான் தம்மை யார் எவ்வளவு நிந்தித்தாலும் பொறுத்துக் கொள்வார். ஆனால் பிறரை நிந்தனை செய்தால் துளியும் தாங்க மாட்டார். சற்று உரத்த குரலில், "ஓஹோ, உன்னை நீ தெரிந்து கொள் என்று சொன்னால், கேட்காமல், அவரிடம் இந்தக் குறை இவரிடம் இந்தக் குறையென்று தோஷம் கூறுகிறாயே! உன் குறையை நீ திருத்திக் கொண்டால் போதும். அவர்கள் குறைகளை அவர்கள் தாமே பார்த்துக் கொள்ள முடியும். உன் செர்டிஃபிகேட் இல்லாமல் அவர்களால் மோக்ஷம் அடைய முடியாத என்ன? பாவம்! உன் செர்டிஃபிகேட்டைத்தான் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மகா பெரியவன். நீ மெச்சவில்லையென்றால் அவர்களுக்கு கதி வேறேது? இங்கே அவர்களைக் குறை சொன்னாய். இன்னொரு இடத்தில் எங்களைக் குறை சொல்வாய். நீ எல்லாம் அறிந்தவன். நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள். உனக்கு அடங்கியிருக்க வேண்டும்தான். இருப்போம். 'ரமணாச்ரமத்திற்குப் போனேன். அவரிடம் கேள்வி கேட்டேன். அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவருக்கொன்றும் தெரியாது' என்று எல்லோரிடமும் பிரகடனம் செய் அப்பா" என்றார் பகவான்.
அந்த வாலிபன் திரும்பவும் அதே தோரணையில் பேசத் தொடங்கியதும், ஒரு பக்தர் தடுத்தார். பகவான் அதைப் பார்த்து, "இருங்கள் ஐயா, நீங்கள் யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். அவர் மனது திருப்தியடையும் வரை பேசிக் கொண்டேயிருக்கட்டும். அவர் அறிவாளி, நாமெல்லாம் அவருக்குப் பணித்திருக்க வேண்டும். இவர் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். இதெல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு மூளையில் உட்கார்ந்திருந்தார். நாளாக நாளாகக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்தில் வந்தார். நேற்று அந்த அம்மாள் கேள்விகள் கேட்டதைப் பார்த்து, 'நானும் ஒருத்தன் இருக்கிறேன்' என்று மூட்டையை அவிழ்திறுக்கிறார். கட்டி வைத்ததெல்லாம் அவிழ்த்து விட வேண்டாமா? இந்த உலகமெல்லாம் தேடி குருஸ்வரூபம் நிர்ணயிக்கிறாராம் இவர். தனது குருவாக ஏற்றுக் கொள்வதற்கு யோக்யதை, இதுவரை எவரிடமும் தென்படவில்லையாம். தத்தாத்ரேயர் ஜகத்குரு இல்லையா? அவரே 'உலகமெல்லாம் எனக்கு குருதான்' என்றார். ' கெட்டதைப் பார்த்தால் அதைச் செய்யக் கூடாதென்று தோன்றுகிறது. அதனால் அதுவும் குருதான். நல்லதைப் பார்த்தால் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. அதனால் இதுவும் குருதான். நல்லவை, கெட்டவை இரண்டுமே எனக்கு குருக்கள்தான்' என்று சொன்னார். வேடனொருவனை அவர் வழிகேட்ட போது, தன் சொல்லை அவன் காதில் போட்டுக் கொள்ளாமல், பறவையையே குறி பார்த்து அடிப்பதைக் கண்டு, 'அப்பா, நீ எனக்கு குரு' என்று நமஸ்கரித்தாராம். பறவையைக் கொள்வது ஹிம்சையானாலும் கவனத்துடன் குறிபார்த்து அம்பு எய்வதைப் பார்த்து 'என் மனமும் இந்த விதமாகவே ஈச்வரணிடத்தில் குறியாகவிருந்து லயிக்க வேண்டும் என்று நீ போதிக்கிராய். ஆகையால் நீ எனக்கு ஒரு குரு' என்றாராம். இவ்விதமாக எதைக் கண்டாலும் அதுவே குருவென்று சொல்லி கடைசியில் இந்தச் சரீரமே குரு என்றார். எப்படியென்றால் தூக்கத்தில் இந்தச் சரீர உணர்வில்லை. இந்த இல்லாத பொருளின்மேல் தேகாத்ம பாவம் கூடாதென்று போதிக்கிறது. அதனால் இதுவும் குருதான். அவர் உலகத்தையெல்லாம் குருவாகப் பாவித்ததால் உலகமெல்லாம் அவரைக் குருவென்று கொண்டாடியது. ஈச்வரன் விஷயத்திலும் அப்படித்தான். உலகத்தையெல்லாம் ஈச்வர மயமாக எவர் பார்க்கிறாரோ அவரை ஈச்வரன் என்று உலகம் வணங்கும், நாம் எவ்வாரோ அவ்வாறே உலகமும், 'யத்பாவம் தத்பவதி' என்கிறார்கள். பெரிய தோட்டமொன்றிருக்கிறது. குயில் வந்தால் நல்ல பழங்களுக்காக மாமரங்களைத் தேடுகிறது. காக்கை வந்தால், அது வேப்பமரங்களைத் தேடுகிறது. வண்டுகள் தேனுக்காக நல்ல புஷ்பங்களைத் தேடினால், ஈக்கள் மலத்தைத் தேடுகின்றன. சாலக்ராமம் வேண்டுபவன் கற்களையெல்லாம் தள்ளிவிட்டு அது ஒன்றை மாத்திரம் எடுத்துப் பூஜிக்கிறான். அந்தச் சாலக்ராமம் கற்களுக்கிடையில்தான் இருக்கும். கெடுதல் இருந்தால்தான் நல்லது தெரியும். இருள் இருந்தால்தான் வெளிச்சம் தெரியும். மாயை இருந்தால்தான் ஈச்வரன் இருப்பான். சாரத்தைக் கிரஹிப்பவனுக்கு நூற்றில் ஒன்று நல்லது கிடைத்தால் போதும். அந்த ஒன்றை எடுத்துக் கொண்டு மீதி தொண்ணூற்றோன்பதைத் தள்ளிவிட்டு, 'இது ஒன்று போதும்பா நமக்கு', இதைக் கொண்டு உலகத்தை எல்லாம் ஜயிக்கலாம் என்று நினைக்கிறான். அவனுடைய பார்வை அந்த ஒன்றின் மேல்தான் இருக்கும்", என்று கணீர்க் குரலில் சொல்லி முடித்தார் பகவான்.
ஹால் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. மணி 'டண், டண்' என்று நான்கு முறை முழங்கியது. அஞ்ஞானம் என்னும் சூரபத்மனை சம்ஹாரம் செய்த அருணாசல ரமணரின் பாத பத்மங்களை நமஸ்கரித்து, துதி இசைக்க வந்த ஆதிமயூரமே போன்று வடதிசையில் இருந்து ஹாலுக்குள்ளே ஒரு மயில் வந்து, கம்பீரமான கேகாத்வனியில் தன் வரவைத் தெரியப் படுத்திக் கொண்டது. பகவான் "ஆவ் ஆவ்" என்று அழைத்துக் கொண்டே தன் பார்வையை அந்தப் பக்கம் திருப்பினார்.
- சூரிநாகம்மா
(ஸ்ரீ ரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள், பாகம் 1)
நன்றி : திருமதி  சாந்தா  பாலகுமாரன் அவர்கள்  முகநூல்  பக்கம்  மற்றும்        கார்த்திகேயன் செல்வராஜ்   அவர்கள்.  

Wednesday, August 9, 2017

மழை எப்படி வருகிறது ! - பெரியவா :

மழை  எப்படி  வருகிறது ! - பெரியவா :

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

           தேவலோகத்தில்   வயல்  கிடையாது. தேவர்களுக்கு  சாப்பாட்டுக்கு  வழியில்லை. 
"  துர்பிக்ஷம்   தேவலோகேஷு   மநூநாம்   உதகம்  க்ருஹே "  என்று  வேதத்திலேயே  சொல்லியிருக்கிறது. மேல்மட்டத்தில்  இருக்கிற  மேகங்கள், மழையாக   பூமியில்  பெய்து,  பூலோகத்தில் தான்  ஜலம்,  ஆறு ,  ஏரி,  கிணறு  என்று  எடுத்துப்   பிரயோஜனப்படுத்திக்கொள்ளும்படி  இருக்கிறது.

          உதகம் ( ஜலம் )  நம்  லோகத்து  மனுஷனின்  கிருஹத்தில்   தான்  உண்டு.  ஜலத்தை  கொண்டு  பயிர்  பண்ணி  சுபிக்ஷம்  அடைவது  பூலோகத்தில் தான்.  வயல்  இல்லாத  தேவலோகத்தில்  துர்பிக்ஷம்தான் .  இப்படி  அந்த  வேதவாக்கியம்  சொல்கிறது.  ஆனால்   மேலே  இருக்கிற  மேகம்  நமக்கு   ஜலம்   வரவேண்டுமானால்,  அது  தேவர்களின்  அனுகிரஹத்திலேயே    நடக்கும்.

           நாம்  யக்ஞம்   செய்தால் தான்  அவர்கள்  அந்த  அனுகிரஹத்தை  பண்ணுவார்கள். இல்லாவிட்டால்  மழை  பெய்யாது.  பஞ்சம் தான்  வரும்.  பூமியில்  பெய்யாமல்  சமுத்திரத்திலேயே  எல்லா  மழையும்  பெய்துவிடும். அல்லது  பயிரெல்லாம்  அழுகி  அடித்துக்கொண்டு  போகும்படி  பேய்மழையாகப்   பெய்யும்.  

           ஒன்று -  அளவுக்கு  மீறி  பெய்து  வெள்ளத்தில்  பயிர்  நாசமாவது.  இன்னொன்று - மழையே  பெய்யாமல்    பஞ்சம்  ஏற்படுவது.  இந்த  இரண்டும்  ஏற்படாமல்   சுபிட்சத்துக்கு  உரிய   மழையை   அளவாக  அனுப்பி   வைக்கிற  சக்தி   தேவலோக  வாசிகளுக்கு  மட்டுமே  இருக்கிறது.

                                                   -  மஹாபெரியவா 

நன்றி :  காஞ்சி   மகானின்   கருணைக்  கடலில்.


             நண்பர்களே !  மஹா  பெரியவாவின்   வார்த்தைக்கு   இணங்க ......அளவோடு,  சுபிக்ஷமான  மழை   பெய்ய  யாரேனும்  ஒருவராவது, .............எனது  வேலை  இந்த  ஹோமங்களை  மிகவும்  சத்தியமாக , நியதியோடு,  அணுவளவும்  பிசகாமல்  செய்தல் என   வாழ்ந்தால் .........ஒன்று  அரசாங்கம்  ஆதரிக்க  வேண்டும்  அல்லது   நாம்  வாழும்  சமுதாயம்  ஆதரித்தல்   வேண்டும்.  சமுதாயத்தில்  வாழும்  நம்  ஒவ்வொருவரின்  கடமையும்  கூட ............நம்  எல்லோருக்காகவும் ,  தாவர ,  விலங்கு , பறவைகளின்  நன்மைக்காக  இதுவே  கடமையாக  எடுத்துக்கொண்டு   ஹோமம்  செய்தால் .........அவருக்கு  ஹோமத்திற்கு  தேவையானதை  சுற்றியுள்ள  சமுதாயம்  அளித்தால் ..................மஹா  புண்ணியம்  அதுவே !  

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

         அப்புண்ணியத்தில்   பங்கு  பெற  நீங்கள்  விரும்பினால் ........அதிகம்  வேண்டாம் ! ( இதுவும்  பெரியவா  சொல்லியது -  ஒருவரிடமிருந்தே  பெறவேண்டாம்,  ஒரு  ஊரில்  ஒருவரே  பங்குபெற்று  புண்ணியம்  பெறுவதைவிட ........ரூ 1/-   என  வீடுதோறும்  வேதபாட சாலைக்கு......  பெற்றுவருமாறு பெரியவா  காலத்தில்  பெற்றுள்ளனர்.  அவ்வழியிலேயே  நாமும்    மாதம்   தோறும்  ரூ. 100/-  மட்டும்  கீழ்கண்ட  BANK A /C  அனுப்பினால்   ஒவ்வொரு   சனிக்கிழமை  தோறும்  வருண சூக்தம்   மற்றும்   வருண  மந்திரங்களுடன்  ஹோமம்  செய்யப்படும். 

( ஸ்ரீ  வித்யா  உபாசகர்  தமது  பெயரை  வெளியிட  விரும்பவில்லை - எவ்வித  அடையாளமும்  இன்றி,  தமது  கடமையாக, எவ்வித  எதிர்பார்ப்பும்  இன்றி   உபாஸனையை  தொடர்கிறவர் ...............எனவே  இங்கு அவர்  பெயர்  தவிர்க்கப்பட்டுள்ளது )

           Youtube -ல்   நேரடியாகவும்  காணலாம்.  அல்லது  பதிவேற்றத்தை  கண்டு  மகிழலாம்.  கணக்குகள்  வருடத்திற்கு  ஒருமுறை  இங்கேயே  பதிவிடப்படும். மீதம்  இருப்பின்  அவை  அனைத்தும்  அறச்செயல்களுக்கே  செலவிடப்படும்.  ஏனெனில்   ஹோமம்  செய்பவர்  எப்போதும்  மஹா  பெரியவா  தன்னை  கண்காணித்துக்கொண்டே  இருப்பதாக  உணர்பவர். அவரின்  அனுபவங்களும்  
அவ்விதமே !

           பங்கு கொள்ள  விரும்பினால்  எமது  முகவரிக்கு  வரலாம். வீட்டிலேயே  பூஜைகளும்,  ஹோமங்களும்  நிகழ்ந்துகொண்டு  இருக்கிறது.
வெள்ளிதோறும்  ஸ்ரீ  சக்ர   மஹா   மேரு   பூஜையும்  நடைபெறுகின்றது.  விரும்பினால்  கலந்துகொள்ளலாம்.  முன்கூட்டியே  தெரிவித்தால்  உணவு  மற்றும்  தங்குமிடம்  ஏற்பாடு  செய்ய  எங்களுக்கு  எளிதாகும்.

  சரி ,   யக்ஞம்   செய்பவரின்   தகுதி   அறியவேண்டுமே ?  என்பாருக்கு ....................
ஸ்ரீ  வித்யா  உபாசனையாளர் ....... ஆயிரக்கணக்கான   யக்ஞங்கள்  செய்தவர்.  தினசரி  சந்தியாவந்தனமும்,  ஸஹஸ்ர  காயத்ரியும்  செய்பவர்,
இதுபோக  யந்திர  பூஜைகளும்,  சிவ   சாளக்ராம  பூஜைகளும்  செய்பவர்..................









படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு மற்றும் இரவு

            இவை   வற்புறுத்தல்  அல்ல !  யாரேனும்  ஒருவர்  தமது  கடமை  - ஸ்ரீ  வித்யா  உபாசனையே -   யக்ஞம்   செய்தலே  ...... அதற்கே  இந்த  வாழ்க்கை  என  வாழ்வோருக்கு,  சமுதாயத்தின்  பொருட்டு  இந்த  பூஜைகளும், ஜபமும் ,   யக்ஞம்  என  இருப்போரை   ஆதரித்தல்,
 நமது  கடமை  என  உள்ளுணர்வு  தூண்டுவோர்  இந்த  புண்ணிய  காரியத்தில்    பங்கு  கொள்ளலாம்.



contact   mail :  svu15erode@gmail.com



             மஹா  மேருவிற்கு  லலிதாசஹஸ்ரநாம  குங்கும  அர்ச்சனை  செய்யப்படும். தங்களின்  குடும்ப  க்ஷேமத்திற்கு  விரும்புவர்கள்  தங்களின்  பெயர், கோத்ரம் , மேலும்  4 பெயர் - நக்ஷத்ரம் , உட்பட    அர்ச்சிக்க ( சொந்த  உபயோகத்திற்கு   அல்ல !  நண்பர்களே !  நலிந்த  வேதபாடசாலை , கோசாலை  சம்ரக்ஷணம்,  சுற்றியுள்ள  ஏழைக்குழந்தைகளின்  கல்வி, சமுதாயம்  சார்ந்த  அறச்செயல்கள்  மட்டுமே  செய்ய )  ரூ 100/- மட்டும்  மேற்கண்ட  account  - ல்   சேர்த்துவிட்டு,  கீழ்கண்ட  email   முகவரிக்கு  தெரியப்படுத்தவும்.

      svu15erode@gmail.com

தங்களுக்கு   தேவைப்படும்  ஹோமமும்  செய்து  தரப்படும். 
கீழ்கண்ட தொலைபேசி  மற்றும்  அலைபேசியில்  தொடர்பு  கொண்டு 
மூன்று  நாட்கள்  அல்லது  குறைந்தபட்சம்  2 நாட்களுக்கு  முன்பே   தெரியப்படுத்தினால், எங்களுக்கு  பொருட்களை  ஏற்பாடுசெய்துகொள்ள   வசதியாக  இருக்கும்.
நன்றி !  நண்பர்களே !  இப்போது   இன்னும்  பொறுப்பும்,  அக்கறையுடன்  செய்ய  வேண்டும்  என்ற  உணர்வு  கூடியுள்ளது.


mobile  no. 8903186469.







 இவர்  சிரத்தையுடனும்,  உண்மையாகவும்  செய்வார்  என்ற  நம்பிக்கை  கொண்டோருக்கு மீண்டும்  நன்றி  நண்பர்களே !   
             

Monday, August 7, 2017

“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”

பெரியவா சரணம் !!


"" பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே ""
பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது!
ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள். இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்.

நன்றி : சிவ சங்கரன்.

இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஓர் அனுக்கிரகமா?

"உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.."

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள், தாடி மற்றும் குளோஸ் அப்

(இப்படி ஓர் அனுக்கிரகமா? கோடி ஜன்ம புண்ணியம்
இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது.)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தரிசனத்துக்காக இரண்டு மணி நேரம் காத்துக்
கிடந்தேன்.தரிசனம் கிடைக்கவில்லை. இனிமேலும்
தாமதித்தால் என்னுடைய அலுவலக வேலைகள்
(நான் இன்ஸ்பெக்‌ஷன் செய்வதற்காக அருகிலிருந்த
ஜங்ஷனுக்கு வந்திருந்தேன்) தடைபட்டுவிடும்
என்பதால், தொலைவிலிருந்தபடியே ஒரு கும்பிடு
போட்டுவிட்டு,என் அலுவலைப் பார்க்க சென்று விட்டேன்.
இரண்டு மணி நேரம் கழித்து, ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி
ஒருவர் ரயில்வே நிலையத்துக்கு வந்து,பெரியவாள்
அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லியனுப்பியதாகச்
சொன்னார்.
"பெரியவா சொன்னதை அப்படியே சொல்லுங்கோ"
"சதாரா ஸ்டேஷன்லே போய்ப் பார். இன்ஸ்பெக்‌ஷன்
பண்ணிண்டு இருப்பான் அந்த ராமஸ்வாமி.
வரச்சொல்லு என்றார்கள்."
பரபரப்புடன் வேலையை முடித்துக்கொண்டு தரிசனத்துக்கு
சென்றேன். மன்னிப்புக்கோரும் விதமாக, "பெரியவா ரொம்ப
பிஸியாக இருந்தீர்கள்.நான் ஆபீஸ் வேலையை முழுமையாக
முடிக்காமல் ஹெட் குவார்ட்டர்ஸ் போக முடியாது.என்னுடைய
மேலதிகாரி சத்தம் போடுவார்..." என்று ஆரம்பித்தேன்.
பெரியவா என் பதிலை சட்டை செய்ததாகவே தெரியவில்லை!
பட்டென்று," உனக்கு என்ன வேணும்?" என்றார்கள்.
அப்போது என் மனத்தில் ஒரே பிரச்னை தான் இருந்தது -
என் மகள் கல்யாணம்.
"என் பெண்ணுக்கு நல்ல இடத்திலே கல்யாணம் ஆகணும்.அப்பா
ரொம்ப தொந்தரவு பண்றார். அவரும் பல பேர்களுக்கு ஜாதகம்
அனுப்பி, வரன் ஜாதகம் கேட்கிறார்.ரொம்ப பேர் பதில் போடுவதே
இல்லை. வந்த ஜாதகங்கள் பொருத்தமாக இல்லை.."
"அவ்வளவு தானே?... சரி, போ, உன் பெண் கல்யாணத்தை நான்
நடத்தி வைக்கிறேன்.."
இந்த தெளிவான பதில் என்னை அதிர்ந்து போகச் செய்தது.
"நான் நடத்தி வைக்கிறேன்..."
என்மேல் பனிமழை பொழிந்தாற் போலிருந்தது. எதிர்பாராத
இன்பத் தாக்குதலை அனுபவித்தவர்களுக்குத் தான் என்
நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். உடனே சற்றும்
யோசிக்காமல் மகா பாமரத்தனமாக,"சத்தியமாச் சொல்றேளா?"
என்று கேட்டு விட்டேன்.
சத்திய ஸ்வரூபத்திடம் இப்படி ஒரு கேள்வி!
(இப்போது நினைத்தாலும் என் உடம்பு நடுங்குகிறது)
கருணை வள்ளல் மெல்லச் சிரித்தது. அவ்வளவே. இந்த
நிகழ்ச்சி அப்போது என் மனத்தில் ஆழமாகப் பதியவேயில்லை.
நான் ஊருக்குப் போய் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.
இரண்டு மாதத்துக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஒரு கடிதம்
வந்தது. என் அப்பா எப்போதோ எழுதிய கடிதத்துக்குப் பதில் -
வரன் ஜாதகத்துடன்.
ஜாதகங்கள் பொருந்தி இருந்தன. மற்ற நடைமுறைகள்
நடந்து கல்யாணமும் நடந்து விட்டது.
இரண்டு வருஷங்களுக்கு மேல் இடைவெளி.
கர்னூலில் ஸ்ரீமடம் முகாம்.
நான், என் பெண், பெண்ணின் குழந்தை - பெரியவா
தரிசனத்துக்குச் சென்றோம்.
பெரியவா காலடியில், அருட்பார்வையில் குழந்தையைப்
போட்டு விட்டு, பெரியவாளின் விசாரணைகளுக்குப் பதில்
சொல்லிக் கொண்டிருந்தோம்.(குழந்தை அதற்குள்
அப்படியே தூங்கிவிட்டது.)
பெரியவா பிரசாதம் கொடுத்ததும் நான், என் பெண்ணுடன்
புறப்பட்டு நாலைந்து தப்படி வைத்து விட்டேன்.
பெரியவா விரலைச் சொடுக்கி கூப்பிட்ட மாதிரி இருந்தது.
திரும்பினோம்.
"இந்த கொழந்தையை மடத்திலே வெச்சுண்டு, நான் எப்படி
சம்ரட்சிக்கிறது? எடுத்துண்டு போ!"
எங்களுக்கு மகா வெட்கம்.பெரியவா தரிசன பேரானந்தத்தில்
குழந்தையை மறந்து விட்டோம்.
என் பெண் ஓடிச்சென்று குழந்தையை எடுத்துக் கொண்டாள்.
அப்போது பெரியவா அருகிலிருந்த ஸ்ரீகண்டன் என்ற
தொண்டரிடம், "ராமஸ்வாமிக்கு திருப்தியான்னு கேளு"
என்றார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


எனக்குப் புரியவில்லை.இப்போது அப்படி ஒரு கேள்வி
எதற்கு? நாங்கள் சந்தோஷமாகத்தானே புறப்பட்டுக்
கொண்டிருக்கிறோம்?
பதில் சொல்ல முடியவில்லை.
"அவன் பெண்ணோட பேரென்னன்னு கேளு"-பெரியவா
"உமா" என்றேன்.
மாப்பிள்ளை பேரு?" -பெரியவா
"சதாசிவன்"...நான்
"சரிதானே?..என்னைக் குத்தம் சொல்லக் கூடாது?
பெயர் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்து
வெச்சுருக்கேன்!.."
என் கண்களில் பொல பொலவென்று நீர் வழிந்தது.
இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஓர் அனுக்கிரகமா?
கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்று இரண்டு
வரும் போலிருக்கிறது

நன்றி :  மஹா  பெரியவா  முகநூல்  பக்கம்.